முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். - மும்பை கொல்கத்தா ரைடர்சை வீழ்த்தியது

வெள்ளிக்கிழமை, 27 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 27 - இந்தியன்ஸ் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கான தகுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், துவக்க வீரர் பிளிஜ்சார்டு அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணியை  வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் டெண்டுல் கர் மற்றும் பிராங்ளின் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, முனாப் படேல் நன்கு பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குல்கர்னி, ஹர்பஜன் சிங் மற்றும் மலிங்கா ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியின் இறுதிச் சுற்றுக்கானதகுதிச் சுற்றுப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும் பை இந்தியன்ஸ் அணியும், கேப்டன் காம்பீர் தலைமையிலான கொ ல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி  பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில், கேப்டன் காம்பீர் மற்றும் காலிஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி மும்பையின் பந்து வீச் சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில், அந்த அணி 20 ஓவரி ல் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்னை எடுத்தது. 

கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், ஆலந்து வீரரு மான டென் டஸ்சாட்டே அபாரமாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்து அணி கெளரவமான நிலையை எட்ட உதவினார். 

டஸ்சாட்டே அதிரடியாக ஆடி, 49 பந்தில் 70 ரன்னை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம்.  அவருடன் இணைந்து ஆடிய யூசுப் பதான் 24 பந்தில் 26 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, ஷாகிப் அல் ஹசன் 16 பந்தில் 26 ரன்னை எடுத்தார். 

கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில், 20 ரன்னிற்கு 4 விக்கெட்டை இழந் து தடுமாறிக் கொண்டு இருந்தது. கேப்டன் காம்பீர், காலிஸ், கோஸ் வாமி மற்றும் எம். கே. திவாரி ஆகியோர் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்பு டஸ்சாட்டே, பதான் மற்றும் ஹசன் ஆகியோரது ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டது. 

மும்பை அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான முனா ப் படேல் 27 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, குல்கர் னி, ஹர்பஜன் சிங் மற்றும் மலிங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

மும்பை அணி  148 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை கொல்கத்தா அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 148 ரன்னை எடுத்தது. 

இதனால் மும்பை அணி இந்த இறுதிச் சுற்றுக்கான தகுதிப் போட்டியி ல் 4 பந்து மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி முன்னிலை பெற்று உள்ளது. 

மும்பை அணி தரப்பில், துவக்க வீரர் பிளிஜ்சார்டு அதிகபட்சமாக, 30 பந்தில் 51 ரன்னை எடுத்தார். தவிர,கேப்டன் டெண்டுல்கர் 28 பந்தில் 36 ரன்னையும், பிராங்ளின் 25 பந்தில் 29 ரன்னையும் எடுத்தனர். ராயு டு 12 ரன் எடுத்தார். 

கொல்கத்தா அணி சார்பில், ஜாக்ஸ் காலிஸ் 18 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 24 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். தவிர, பிரட்லீ 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக முனாப் படேல் தேர்வு செய்யப்பட்டார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி அடுத்ததாக பெங் களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த ஆட்ட ம் இன்று நடக்கிறது. இதில் மும்பை வெற்றி பெறும் பட்சத்தில் இறுதி ச் சுற்றுக்கு முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்