முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சிப்பாறை- பெருஞ்சாணி அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு-ஜெயலலிதா உத்தரவு

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, மே.- 28 -  கன்னியகுமரி மாவட்டதிலுள்ள  பேச்சிப்பாறை- பெருஞ்சாணி அணையிலிருந்து  கீழ் பாசன கோதையாற்றில்  சாகுபடிக்கு ஜூன் 1 ம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிபாறை, பெருஞ்சாணி, சித்தார்-1 மற்றும் சித்தார்-2 ஆகிய நீர்த்தேக்கங்களில் 26.5.11 அன்றைய நிலவரப்படி 4871 மில்லியன் கன அடி (4.9 ) தண்ணீர் இருப்பு உள்ளது.
இந்த ஆண்டில் (2001-2012) கோதையாறு மற்றும் கோதையாறு பட்டணங்கால் பாசன அமைப்பின் கீழ் உள்ள பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாய பெருமக்களின்  வேண்டுகோளினை ஏற்று, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார்-1 மற்றும் சித்தார்-2 ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து கோதையாறு மற்றும் கோதையாறு பட்டணங்கால் பாசன அமைப்பின் கீழுள்ள பாசன சாகுபடிக்காக 1.6.11 முதல் 28.2.12 வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, அகஸ்தீஸ்வவம், கல்குளம் மற்றும் விளவங்கோடு வட்டத்திலுள்ள சுமார் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்