முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபநாயகராக ஜெயக்குமார் ஒருமனதாக தேர்வு-தலைவர்கள் வாழ்த்து

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, மே.- 28 - தமிழக சட்டமன்ற சபாநாயகராக டி. ஜெயக்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகர் தனபால் தேர்வு. இவர்களுக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா, எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த், தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் யாவரும்  வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14 வது தமிழக சட்டமன்ற பேரவையின் 2 வது கூட்டம் நேற்று காலை9.30 மணிக்கு தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் திருக்குறல் வாசித்து  அவை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  கடந்த 23 ம் தேதி  சட்டமன்ற உறுப்பினர்களாக  பதவி ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்போது ஏற்றுக் கொள்வார்கள் என அறிவித்தார். சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் , அமைச்சர் சிவபதி,  ஆர்.மனேகரன் ஆகியோர் பெயர்களை  கூறி பதவி பிரமானம் எடுத்துக்கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதிவிஏற்றுக்கொண்டனர்.
இதனைதொடர்ந்து   புதிய  சபாநாயகர் தேர்தலை தற்காலிக சபாநாயகர் நடத்தினார். இதில் சபாநாயகர் தேர்தலில்  ஜெயலலிதா முன்மொழிந்து,  அவை முன்னவர் ஒ.பன்னீர்செல்வம் வழிமொழிந்து  வேட்பு மனு தாக்கல் செய்த டி. ஜெயக்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.  அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொணடார் . இத்துடன் தன் பணி நிறைவடைந்ததாக தெரிவித்து விடைபெற்றார்.
 அப்போது சபாநாயகரா ஜெயக்குமார் பெறுப்பேற்றார். அவரை அவை முன்னவரரும், எதிர்கட்சி தலைவரும் எழுந்து சென்று ஜெயக்குமார் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இருக்கையில் அமர்ந்த சபாநாயகர் ஜெயக்குமார் ஜெயலலிதா உள்ளிட்ட சபாயில் இருந்த அனைவருக்கும் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
இதனையடுத்து துணை சபாநாயகர் தேர்தலை நடத்தினார். அப்பதவிக்கு ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் பி. தனபால் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதை குறிப்பிட்டு, அதில்  முதலமைச்சரும், அவை முன்னவரும்  முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருப்பதை விதிப்படி சுட்டிக்காட்டினார். வேறுயாரும் பேட்டியிடாததால்  தனபால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக  அறிவித்தார்.
இதனை தொடர்ந்த  சபாநாயகர், மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு, சட்டமன்றத்தில் இருந்த  முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்,  நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், சட்டமன்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் ஏ. சவுந்திரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆறுமுகம், காங்கிரஸ்  கோபிநாத், பா.ம.க சார்பில் ஜெ.குரு,  மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,  புதிய தமிழகம் டாக்டர்.கிருஷ்ணசாமி,  சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், அகிய இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன் ஆகியோர் பாராட்டும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்