முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் கலவரம் பரவுகிறது இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமை, 28 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மே.- 28 - ஏமன் நாட்டில் கலவரம் பரவி வருவதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  எகிப்தை அடுத்து லிபியா, ஏமன், ஓமன் ஆகிய நாடுகளில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக அமெரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதிபர் கடாபி தப்பியோடிவிட்டார். ஏமன் மற்றும் ஓமன் நாடுகளிலும் கலவரம் பரவி வருகிறது ஏமன் நாட்டில் கலவரத்திற்கு இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். அதனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள், தொழில் செய்பவர்கள் மற்றும் இதர பணிகளுக்காக சென்ற அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஏமன் நாட்டில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மிகவும் தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலொழிய மற்ற அனைவரும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்