முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து கட்சிகளுக்கும் பேச சம வாய்ப்பு - சபாநாயகர்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.31 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி அனைத்து கட்சிகளுக்கும் பேச சம வாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டமன்ற பேரவை தலைவர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

​ கேள்வி:​ எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவி ஏற்று விட்டார்களா? 

பதில்:​ 233 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்று உள்ளார்கள். ஒரு இடம் காலியாக உள்ளது. நியமன உறுப்பினர் நியக்கப்பட்டதும் அவர் பதவி ஏற்றுக் கொள்வார். 

கேள்வி:​ சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு இருக்கைகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டு உள்ளது.

 பதில்:​ சட்டமன்ற விதிகளின் படி இருக்கைகள் ஒதுக்கப்படும். 3​ந் தேதிக்குள் அது முடிவாகும். கேள்வி:​ உறுப்பினர்களுக்கு சமமாக பேச வாய்ப்பு அளிக்கப்படுமா?

 பதில்:​ அம்மா வழங்கிய ஆலோசனைப்படி அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். சட்டசபையில் நான் ஆற்றிய உரையிலும் இதை குறிப்பிட்டு இருக்கிறேன். 

கேள்வி:​ தி.மு.க. எம்.எல்.ஏ. துரைமுருகன் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மனுவில் தவறான தேதியை குறிப்பிட்டு இருப்பதாகவும், எனவே அவரை எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க அனுமதிக்ககூடாது என்றும் புகார் மனு வந்து இருப்பதாக கூறப்படுகிறதே? 

பதில்:​ தேர்தல் கமிஷன்தான் அது பற்றி முடிவு எடுக்க வேண்டும். 

கேள்வி:​ 3​ந் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும்? 

பதில்:​ அலுவல் ஆய்வு குழுதான் அதை முடிவு செய்ய வேண்டும். 

கேள்வி:​ முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரையின் வெற்றி செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளதே? அது பற்றி என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்? 

பதில்:​ அதன் நகல் சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்