முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை புளியந்தோப்பு தீ விபத்து - அமைச்சர்கள் ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.மே.31. - சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியும், நிதியுதவியும் , சேலை, வேட்டிகளும்  உடனடியாக வழங்க கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

இதுகுறித்த விபரம் வருமாறு:​சென்னை எழும்ர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி கோட்டஎண்.45 ல் அமைந்துள்ள கேசவப்பிள்ளை nullங்கா திட்டப்பகுதியில் பழுதடைந்தவீடுகளை இடித்துவிட்டு மீண்டும் புது வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக தற்காலிகமாகவிளையாட்டு மைதானத்தில் 160 குடும்பங்கள் குடிசைகளில் வசித்து வந்தனர்.

இப்பகுதியில் 29.05.2011 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் தீவிபத்துஏற்பட்டதின் காரணமாக அனைத்து குடிசைகளும் எரிந்து விட்டன. இதில் 2 நபர்கள்தீ காயம் ஏற்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க 30.05.2011 அன்று  உள்ளாட்சித் துறை அமைச்சர்

கே.பி. முனுசாமி , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் , பாராளுமன்ற உறுப்பினர் ந.பாலகங்கா , எழும்nullர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நல்லதம்பி,

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் க. பணீந்திர ரெட்டி , சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும்சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா ஆகியோர் தீவிபத்து ஏற்பட்டபகுதிகளை நேரடியாக பார்வையிட்டு ஒதுக்கீடுதாரர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அமைச்சர்கள் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை கேட்டு உடனடியாக நிவாரண நிதியாக  ரூ.2000 , வேட்டி , சேலைகள்  வழங்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தினர்.

மேலும்சுகாதார வசதிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படி சென்னை மாநகராட்ஆணையருக்கும் அறிவுறுத்தப்பட்டது.பின்னர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அமைச்சர்கள் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சதித்து ஆறுதல் கூறியும், மருத்துவமனை டீன்னிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago