முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனியில் வைகாசி விசாகப் திருவிழா ஜூன் 7ம் தேதி துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, மே 31 - பழனியில் வைகாசி விசாகப் பெருவிழா வரும் ஜூன் 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி மலைக்கோவிலில் முருகனுக்கு ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதில் வசந்தோற்சவம் என அழைக்கப்படும் வைகாசி விசாகப் பெருவிழா வரும் ஜூன் 7 ம் தேதி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

10 நாட்கள் நடக்கும் இந்த விழாவை முன்னிட்டு தினமும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி தங்க மயில், வெள்ளி காமதேனு, கற்பக விருஷம், வெள்ளியானை, தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள் உள்பட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 6 ம் நாளான ஜூன் 12 ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 7 ம் நாளான ஜூன் 13 ம் தேதி மாலை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 

ஜூன் 16 ம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் தினமும் பட்டிமன்றம், சொல்லரங்கம், பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்