முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் மதக்கலவரத்தில் 18 பேர் வெட்டிக்கொலை

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

ஜாஸ், பிப்.25 - ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் நடந்த மதக்கலவரத்தில் 18 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. 15 நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கும் நடந்த மோதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் பெல்லே என்ற கிராமத்துக்குள் ஒரு கும்பல் புந்து அங்குள்ள  மக்களை சராசரியாக வெட்டியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் மறுபடியும் பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கு ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்