முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து கெய்ல் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

டிரினிடாட், மே. 31 - இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி மற்றும் முதல் 2 ஒரு நாள் போட்டி ஆகியவற்றிற்கான மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் பட்டியலை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் அதிரடி துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் இடம் பெறவில்லை. 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் மே ற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து கேப்டன் டேரன் சம்மி தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போ  ட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் 20 -க்கு 20 போட்டி மற்றும் முதல் 2 ஒரு நாள் போட்டி ஆகியவ ற்றிற்கான மே.இ.தீவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 4 -ம் தேதி துவங்குகிறது. 

இந்தியன் பிரீமியர் லீக் போட்டி சமீபத்தில் முடிவடைந்தது. இதன் இறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சே லஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 57 ரன் வித்தியாச த்தில் வெற்றி பெற்று 2 -வது முறையாக சாம்பியன் ஆனது.

சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரின் ஆட்டநாயகனாக மே. இ. தீவு வீரர் கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். இருந்த போதிலு ம், அவர் மே.இ.தீவு அணியில் இடம் பெறவில்லை. 

கடந்த மாதம் பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலை மையில் மே.இ. தீவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த த் தொடரின் முடிவில் இந்திய அணிக்கு எதிரான மே.இ.தீவு அணி தே ர்வு செய்யப்பட்டது. 

அந்த அணியின் முன்னணி வீரரான கெய்ல் இடம் பெறவில்லை. இத னைத் தொடர்ந்து அவர் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் மே.இ.தீவு தேர்வுக் குழுவினரை சாடியிருந்தார். இதனால் அவர் முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை. 

கெய்ல் பிரச்சினை குறித்து மே.இ.தீவு அணி நிர்வாகம், மே.இ.தீவு கிரிக்கெட் வாரிய நிர்வாகம் மற்றும் கெய்ல் ஆகியோருடன் விவாதி த்ததாகவும், அதன் பின்னரே கெய்ல் நீக்கப்பட்டதாகவும் ஒரு அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜமைக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் கெய்ல் செய்த விமர்சனத்தைத் தொடர்ந்து இந்த மீட்டிங் அவசி யமாயிற்று என்றும் தேர்வுக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவிர, ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற மற்றொரு அதிரடி வீரரான கெய்ரான் பொல்லார்டு முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கிறார். தொடர் அட்டவனை காரணமாக வேகப் பந்து வீச்சாளரான கெமார் ரோச்சிற்கு  20 -க்கு 20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான டி - 20 போட்டியில் வேகப் பந்து வீச்சாளரான ஜமைக்காவைச் சேர்ந்த கிரிஷ்மர் சன்டோகி புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். கடந்த மாதம் பாகிஸ்தானை வென்ற அணியில் இவர் இடம் பெறவில்லை. 

பாகிஸ்தானிற்கு எதிராக பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது. மே.இ.தீவில் சமீபத்தில் 20 -க்கு 20 தொடர் நடந்தது. சிறந்த வீரர்களை தேர்வு செய்ய இது ஒரு முக்கிய போட்டியாக கருதப்பட்டது. 

இந்தத் தொடரில் பொல்லார்டு மற்றம் டிவைன் பிராவோ இருவரும் பங்கேற்காததால் மேற்படி இருவரையும் இந்தியாவுக்கு எதிரான 20 - க்கு 20 போட்டியில் தேர்வுக் குழுவினர் நீக்கி விட்டனர். 

டி - 20 க்கான அணி : - டேரன் சம்மி (கேப்டன்), சிம்மன்ஸ், பிளட்சர் (விக்கெட் கீப்பர்), டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், கிறிஸ்டோபர் பர்ன்வெல், ஆன்ட்ரே ரஸ்செல், ஆஸ்லே நர்ஸ், டேவேந்திர பிஷூ, ரவி ராம்பால், கிரிஷ்மர் சன்டோகி ஆகியோர். 

முதல் 2, ஒரு நாள் போட்டிக்கான அணி : - டேரன் சம்மி (கேப்டன்), சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், சர்வான், டிவைன் பிராவோ, கெய்ரான் பொல்லார்டு, கார்ல்டன் பாக், (விக்கெட் கீப்பர்), ரவி ராம்பால், ஆன்ட்ரே ரஸ்செல், டேவேந்திர பிஷூ, மற்றும் அந்தோணி மார்டின் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்