முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச அரிசி திட்டம்: முதல்வர் துவக்கி வைக்கிறார்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.1 - மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று துவக்கி வைக்கிறார்கள். முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்று தொடங்கிவைக்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவேயாகும். தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் அன்றைய தினமே தலைமைச் செயலகத்துக்கு சென்றார். தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரத்துடன் திருமாங்கல்யம் செய்ய அரைப்பவுன் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆணை பிறப்பித்து அதற்கான கோப்பிலும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி திருமாங்கல்யத்திற்கு அரைப்பவுன் தங்கம் இலவசமாக வழங்க உத்தரவிட்டு அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். 

மேலும் பொது விநியோக திட்டத்தில் அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னபோஜன குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கிட ஆணை பிறப்பித்து அதற்கான கோப்பு உட்பட 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதனை நிறைவேற்றிடும் வகையில் அந்தந்த துறை அமைச்சர்கள், துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இலவச அரிசி அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இலவச அரிசியை குடும்ப அட்டைதாரர்களுக்கு தக்க ஏற்பாடுகளுடன் எவ்வித பிரச்சனைகளும் இன்றி வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அரிசி தரமானதாகவும் எடை குறைவின்றியும் வழங்க அதிகாரிகள் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். தவறுகள் ஏற்படாத வகையில் அந்தந்த மண்டல இணைப்பதிவாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

இலவச அரிசியை குடும்ப அட்டை தாரர்கள் அவர்களின் வசதிக்கேற்ப அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரிசி பெற தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். அதேபோல் அந்தியோதயா அன்னபோஜனா திட்டத்தின் கீழ் அரிசி பெறுபவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். இதற்கான அரசாணை கடந்த 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1கோடியே 95 லட்சம் ரேசன் அட்டைகள் உள்ளன. இதில் சர்க்கரை மட்டுமே வாங்குவோர், கெளரவ ரேசன் அட்டை வைத்திருப்போர் தவிர மீதமுள்ள 1கோடியே 84 லட்சத்து 53 ஆயிரத்து 780 ரேசன் அட்டைகளுக்கு இலவச அரிசி வழங்கப்படவுள்ளது. 20 கிலோ இலவச அரிசி 1கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 482 அட்டைகளுக்கு கிடைக்கும். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஏழைகள் வைத்திருக்கும் 18 லட்சக்கு 62 ஆயிரத்து 268 அட்டைகளுக்கு தலா 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். அதற்கான தரமான அரிசியை அந்தந்த நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 10 மணிக்கு துவங்கி வைக்கிறார். ஆழ்வார்பேட்டை 115 வது வட்டம் ஸ்ரீராம் காலனி நியாயவிலைக்கடையில் இலவச அரிசியை மக்களுக்கு வழங்குகிறார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை துவக்கிவைக்கிறார்கள். முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அரசின் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது முனைப்பு காட்டவேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ரேசன் பொருட்கள் விநியோகம் முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் முறையாக நடைபெற வேண்டும். மேலும் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மேலும் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago