முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சரவை வரும் 15ம் தேதி விரிவாக்கம்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.1 - மத்திய அமைச்சரவை வரும் 15 அல்லது ஜூலை தொடக்கத்தில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு பயணத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டியில் மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்படி ஜூன் அல்லது ஜூலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. மத்திய ரயில்வே இணையமைச்சராக பொறுப்பு வகிக்கும் முகல் ராய், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு அவருக்கு அந்த இலாகா ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. 

ஆ. ராசா, பிருத்விராஜ் சவாண் ஆகியோர் ராஜினாமா செய்திருப்பதால் கபில்சிபல் உள்ளிட்டோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த யாரும் இப்போது அமைச்சர்களாக இல்லை. அமைச்சரவை விரிவாக்கத்தில் அந்த மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இதனிடையே பஞ்சாப் ஆளுனர் சிவராஜ் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து பேசினார். அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக ஆளுனர் பரத்வாஜ் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்ற தகவலை காங்கிரஸ் வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்