Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் - ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 2 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரோஜர் பெடரர் வெ ற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். அரை இறுதியில் அவர் டிஜோகோவிக்கை சந்திக்கிறார். 

இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது அரை இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரமான ஆட்டத் திறனை கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று ஒன்று நடந்தது. இதில் உலகின் 3 -ம் நிலை வீரரான ரோஜர் பெடரரும், 9 - ம் நிலை வீரரான மான்பில்சும் பலப்பரிட்சை நடத்தினர். 

3 செட் கொண்ட இந்த ஆட்டத்தில் 2009 -ம் ஆண்டு சாம்பியனான ரோஜர் பெடரர் அபாரமாக ஆடி, 6 - 4, 6 - 3, 7 - 6 (7 - 3) என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீரரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தாவி னார். 

அடுத்து நடக்க இருக்கும் அரை இறுதியில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், செர்பிய வீரர் டிஜோகோவிக்கை சந்திக்க இருக்கிறார். அவர் உலகின் 2 -ம் நிலை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்றொரு காலிறுதியில் செர்பிய வீரர் டிஜோகோவிக்கும், இத்தாலி வீரர் பேபியோவும் மோத திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடை சி நேரத்தில் பேபியோ திடீரென விலகியதால் செர்பிய வீரர் அடுத்த சுற்றுக்கு பை மூலம் தகுதி பெற்றார். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஒன்றில் பிரான்ஸ் வீராங் கனை மரியான் பர்ட்ரோலியும், ரஷ்ய முன்னணி வீராங்கனையான குஜ்னெட்சோவாவும் பலப்பரிட்சை நடத்தினர். 

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பிரான்சைச் சேர்ந்த 11-ம் நிலை வீராங்கனையான பர்ட்ரோலி வெகு நேர்த்தியாக ஆடி, 7 -6, (7 - 4), 6 - 4 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனையை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்