முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு இந்தியத்தீவு சுற்றுப்பயணம் இந்திய அணி புறப்பட்டது

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜூன். 2 - மேற்கு இந்தியத் தீவு அணிக்கு எதிராக நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி கேப்டன் ரெய்னா தலைமை யி ல் மும்பையில் இருந்து விமானம் மூலம் அங்கு புறப்பட்டு சென்றது. இந்த சுற்றுப் பயணம் குறித்து சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ட போது, கேப்டன் பதவி புதிய திருப்புமுனை என்றும், அணியின் வெற்றிக்காக முழு அர்ப்பணிப்புடன் ஆடுவேன் என்று அவர் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா தலைமையில் மே ற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போ  ட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஓய்வு கேட்டதால், முன்னதாக இந்த சுற்றுப் பயணத்திற்கு கேப்டனாக டெல்லி வீரர் காம்பீர் நியமிக்கப்ப ட்டார். ஆனால் ஐ.பி.எல். தொடரின் போது , அவர் காயம் அடைந் தார். 

இதனால் கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக உத்தரபிரதேச வீர ரான சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இத ன் மூலம் அவரது கேப்டன் கனவு நிறைவேறுகிறது. இந்த பயணத்தின் முதல் போட்டி வரும் 6 -ம் தேதி துவங்குகிறது. 

இந்தத் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான தோனி, டெ ண்டுல்கர், ஜாஹிர்கான் ஹர்பஜன் சிங்,சேவாக், காம்பீர் மற்றும் யுவ ராஜ் சிங் ஆகியோர் 20 -க்கு 20 போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிக ளில் கலந்து கொள்ள மாட்டார்கள். 

மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் தோனி, ஜாஹிர்கான், டிராவிட், லக்ஷ்மண், அபினவ் முகுந்த் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் இணைந்து கொள்ள இருக்கிறார்கள். 

இந்திய அணி முதலில் மே.இ.தீவு அணிக்கு எதிராக 20 -க்கு 20 போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான இந்த ஆட்டம் வருகிற 4 -ம் தேதி டிரினிடாட் நகரில் நடக்கிறது. 

அதைத் தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டி நடக்கிறது. ஒரு நாள் போட்டி ஜூன் 6 (டிரினிடாட்), 8 -ம் தேதி (டிரினிடாட்), 11 -ம் தேதி (ஆன்டி குவா), 13 ம் தேதி (ஆன்டிகுவா), 16 -ம் தேதிகளில் (ஜமைக்கா) நடக் கிறது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான முதல் டெ

ஸ்ட் போட்டி வருகிற 20 -ம் தேதி ஜமைக்காவில் தொடங்குகிறது. 2 -வது டெஸ்ட் போட்டி ஜூன் 28 முதல் ஜூலை 2 -ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் ஜூலை 6 முதல் 10 -ம் தேதி வரையும் நடக்கிறது. 

இந்திய அணி கடைசியாக 2006 -ம் ஆண்டில் மே.இ. தீவில் விளையா

டியது. டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 1 - 0 என்ற கணக்கில் முதல் முறையாக  கைப்

பற்றியது. ஆனால் ஒரு நாள் தொடரை 1 - 4 என்ற கணக்கில் இழந்தது. 

மே.இ.தீவு சுற்றுப் பயணத்திற்கு முன்பாக இந்திய அணியின் தற்காலி

க கேப்டன் ரெய்னா நிருபர்களிடம் கூறியதாவது - உலக சாம்பியனா  

ன இந்திய அணி கேப்டனாக இருப்பது எனக்கு திருப்புமுனையாகும். 

இளம் வீரர்களுக்கு திறமையை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பு. அவர்க

ள் முதல்தர போட்டியில் சிறப்பாக ஆடினார்கள். இதனால் மே.இ.தீ

வு அணிக்கு எதிராக நன்றாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன். 

இந்திய அணிக்கு தலைமை தாங்குவது எனக்கு கிடைத்த பெருமை. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago