முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் நிலைய பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி,மே.2 - நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்கள் ஆணு ஆராய்ச்சி நிலையங்கள் அனைத்திற்கும் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தேசிய பேரழி மேலாண்மை ஆணையத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டில் பல பகுதிகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் இருந்து அணுக்கசிவு ஏற்பட்டால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும். மேலும் ஜப்பானில் சுனாமி அலையால் அணுமின்நிலையம் பாதிக்கப்பட்டதுபோல் இந்திய கடற்கரையிலும் சுனாமி அலை தாக்கினால் அணுமின்நிலையங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். அதை தடுக்கவும் அணுமின்நிலையங்களுக்கு உலக தரத்தில் பாதுகாப்பு கொடுக்கவும் தீவிரவாதிகள் யாரும் ஊடுருவி அணுமின்நிலையத்தை தாக்க முடியாத அளவுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும்படி தேசிய பேரழி மேலாண்மை ஆணையத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

அணுமின் நிலையங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நேற்றுக்காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7-ம் நம்பர் வீட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்மோகன் சிங் தலைமை தாங்கினார்.  பாகிஸ்தானின் வணிக நகரான கராச்சியில் துறைமுகத்தில் உள்ள கடற்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்கியது மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுசிமா அணுமின்நிலையம் பாதிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து இந்த கூட்டத்தை மன்மோகன் சிங் கூட்டினார். கூட்டத்தில் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் பெரும் கவலை தெரிவிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் உள்ள அனைத்து அணுமின் மற்றும் அணுமின் ஆராய்ச்சி நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அணுமின் நிலையங்களை பாதுகாப்பு குறித்து தேசிய பேரழி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்