முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். வீரர்களின் பந்து வீச்சால் சுருண்டது கென்யா அணி

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

அம்பணத்தோட்டம்,பிப்.25 ​- கென்யாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 205 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிதியின் பந்து வீச்சில் நிலைகுலைந்த கென்ய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அப்ரிதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கென்ய அணி 33.1 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அம்பனத்தோட்டத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹபீஸ் 9 ரன்களிலும், அகமது ஷெஸாத் 1 ரன்னிலும் ஆட்டமிழந்த போதும் கம்ரான் அக்மல்யூனிஸ்கான் ஜோடி அணியின் சரிவை தடுத்து நிறுத்தியது.
அக்மல் 55 ரன்களும், யூனுஸ்கான் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3 வது விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு வந்த மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல் ஜோடி கென்யாவின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. அணியின் ஸ்கோர் 273 ரன்களை எட்டிய போது மிஸ்பா 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். 52 பந்துகளை சந்தித்த உமர் அக்மல் 1 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது.
கென்யா தரப்பில் ஒடோயோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 318 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கென்யா. தொடக்க ஆட்டக்காரர்கள் மெளரிஸ் அவ்மா 16 ரன்கள், வாட்டர்ஸ் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஒபுயா சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். அவர் 47 ரன்கள் எடுத்திருந்த போது அப்ரிதியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க கென்யா சரிவுக்குள்ளானது. பின்னர் வந்த மிஸ்ரா 6, பட்டேல் 0, கமாண்டே 2, ஒடோயோ ஓடியாம்போ, கோச்சே ஆகியோர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க 33.1 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது கென்யா. பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் அப்ரிதி 8 ஓவர்கள் வீசி 16 ரன்களை விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago