முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மந்திரியை டிஸ்மிஸ் செய்ய ஜனாதிபதி மறுப்பு

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூன் 2 - டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகானை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற லோக் அயுக்தா நீதிபதியின் பரிந்துரையை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். டெல்லியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி நிறுவனம் வரியேய்ப்பு செய்துள்ளதாக புகார் கிளம்பியது. இதையடுத்து தெற்கு டெல்லியில் உள்ள திபோலி கார்டன் என்ற அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றனர். ஆனால் அவர்களை டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜ்குமார் சவுகான் தனது அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லோக் அயுக்தா நீதிபதி மன்மோகன் சாரினி, ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஒரு பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். அந்த அமைச்சர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் செய்திருப்பதால் அவரை தொடர்ந்து பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்துவிட்டதாக லோக் அயுக்தா நீதிபதி மன்மோகன் சாரினிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்