முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிஸ்தான் தீவிரவாதி விவகாரம்: பதில் அளிக்க மறுப்பு

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சண்டிகார்,மே.2 - காலிஸ்தான் தீவிரவாதி தேவிந்தர் பால் சிங் புல்லூரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் குருதாஸ் கமத் பதிலளிக்க மறுத்துவிட்டார். தீவிரவாதி தேவிந்தர் சிங் புல்லூருக்கு தூக்குத்தண்டை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சுப்ரீம்கோர்ட்டில் கருணை மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை சுப்ரீம்கோர்ட்டு நிராகரித்துவிட்டது. இதனையொட்டி ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுக்கப்பட்டது. ஜனாதிபதியும் அந்த மனுவை நிராகரித்துவிட்டார். அதேசமயத்தில் தேவிந்தர் பால் சிங்கிற்கு கருணா காட்ட வேண்டும் என்று பஞ்சாப் மாநிலம் மற்றும் புதுடெல்லியில் உள்ள சிரோண்மணி அகாலி தளம் மற்றும் அமிர்தசரஸ் நகரில் இருந்துகொண்டு செயல்பட்டு வரும் எஸ்.ஜி.பி.சி. உள்பட பல்வேறு சீக்கிய மத அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேவிந்தர் பால் சிங்கிற்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரி வருகின்றன. 

இந்தநிலையில் சண்டிகார் வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கமத்திடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த கமத், இது குறித்து நான் எதுவும் கருத்துக்கூற விரும்பவில்லை. கருணை மனு குறித்து ஜனாதிபதி எடுத்திருக்கும்  முடிவுதான் இறுதியானது என்றார். ஜனாதிபதி இறுதி முடிவு எடுத்துள்ளார். ஜனாதிபதி எடுத்த முடிவு குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையானதாக இருக்காது என்று கமத் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்