முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ. தேசிய நிர்வாக குழு கூட்டம் நாளை ஆரம்பம்

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மே.2 - பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழுவின் 2 நாள் கூட்டம் நாளை லக்னோவில் ஆரம்பமாகிறது. கூட்டத்தில் எல்.கே.அத்வானி உள்பட முக்கிய தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள். தேசிய நிர்வாகக்குழு கூட்டத்திற்கு முன்னதாக கட்சி அலுவலக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்கிறது. நாளை ஆரம்பமாகும் தேசிய நிர்வாகக்குழுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி மற்றும் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி, கல்ராஜ் மிஸ்ரா உள்பட நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட குழுவினர் கலந்துகொள்கிறார்கள். மேலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்பட கர்நாடகம், சட்டீஷ்கர், மத்தியப்பிரதேசம் முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழுக்கூட்டம் இரண்டாவது முறையாக லக்னோவில் நடக்க ள்ளது. இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் ஓராண்டிற்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்குள் கட்சிக்குள் இருக்கும் பூசல்களுக்கு தீர்வுகாண கட்டாயத்தில் இந்த தேசிய நிர்வாகக்குழுக்கூட்டம் நடக்க உள்ளது. கடந்த 1983-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 முறை தேசிய நிர்வாகக்குழுக்கூட்டம் நடந்துள்ளது. முதன் முதலாக கடந்த 1983-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதியில் இருந்து 23 வரை லக்னோ நகரில் நடந்தது. அடுத்து 1992-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை வாரணாசியில் உள்ள சாரநாத்தில் நடைபெற்றது. 3-வது முறையாக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி லக்னோ நகரில் நடைபெற்றது. அப்போது கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் இருந்தார்.  4-வது தடவையாக நாளை லக்னோ நகரில் கூட்டம் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்