முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச அரிசி திட்டம்: மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் தமிழக மக்கள்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 3 - தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் 1 ம் தேதி துவக்கிவைத்தார். தமிழகம் முழுவதும் இந்த இலவச அரிசியை பெற்ற மக்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதப்பதுடன், இதற்கு காரணமான முதல்வருக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

தமிழக முதல்வர் தாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றும் நோக்குடன் முதல்கட்டமாக கடந்த ஜூன் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் பொது விநியோக அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தை சென்னையில் துவக்கிவைத்தார். அதே நேரத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதே நேரத்தில் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.  இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 183 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசியை இலவசமாக பெறுகிறார்கள். இந்த திட்டத்திற்காக ஒரு மாதத்தில் விற்பனையாகும் அரிசியில் 60 சதவீதத்தை கடந்த செவ்வாய்க்கிழமை மாலைக்குள்ளாகவே சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் புதன் கிழமை விநியோகத்திற்கான அரிசி செவ்வாய்க்கிழமை இரவே சென்றடைந்துவிட்டது. இதனை சென்னையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை சிறப்பு அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்தனர். 

அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமலுக்கு வரும் முதல் திட்டம் இது என்பதால் இதனை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாட அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால்  சென்னையைத் தவிர வேறெந்த மாவட்டத்திலும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை  பெரிய விழாவாக கொண்டாடக்கூடாது என்று அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டது. சில பகுதிகளில் ரேஷன் கடைகளில் துணிப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவையும் அன்று மாலையே அகற்றப்பட்டன. 

கடந்த ஆட்சியில் ஒவ்வொரு இலவச திட்டத்திற்கும் ஆடம்பர விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்காக  ஒவ்வொரு திட்டத்தினையும் முக்கியப்புள்ளி ஒருவர் வந்து துவக்கிவைத்ததால் பல்வேறு வகையிலும்  ஏற்பட்ட காலதாமதத்தை மக்கள் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால்   முதல்வரின் இந்த திட்டம் எளிமையாகவும் அதே நேரத்தில் எந்தவித தள்ளுமுள்ளுகளும் இல்லாமலும் அனைத்து பகுதிகளிலும் இலவச அரிசி சிறப்பான முறையில்  கிடைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆடம்பரம், ஆர்ப்பாட்டம்  எதுவும் இல்லாமல் அரசின்  ஒரு திட்டம் உடனடியாக மக்களுக்கு கிடைத்தது தமிழகத்தின் எல்லா பகுதி மக்களையும் பெரிதும் கவர்ந்திருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது. அதுவும் தரம் குறைந்த அரிசியாகவே இருந்தது.  ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் பணமே இல்லாமல் தரமான அரிசி வழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக தாய்மார்கள் எந்த வித செலவும் இல்லாமல் தங்களுக்கு கிடைத்த இலவச அரிசியால் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறார்கள். தமது தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற அயராது பாட்டுபட்டுவரும்  தமிழக முதல்வரை மனதார பாராட்டுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago