முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,மே.3 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற்றது. நம்பிக்கை ஓட்டெடுப்பை காங்கிரசும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளும் புறக்கணித்துவிட்டன. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா அரசு ஆட்சி செய்து வருகிறது. அதேசமயத்தில் சட்டசபையில் பாரதிய ஜனதா அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்ற எண்ணம் எதிர்க்கட்சிகளிடையே நிலவி வந்தது. மேலும் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி மாநில கவர்னர் பரத்வாஜ், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிவைத்தார். இதை எதிர்த்து பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 121 பேர் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து முறையிட்டனர். அதேசமயத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதோடுமட்டுமல்லாது அந்த 12 எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனால் கவர்னர் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இருந்தபோதிலும் முதல்வர் எடியூரப்பாவுக்கு மெஜாரிட்டி இல்லை என்ற கருத்து நிலவி வந்தது. இந்தநிலையில் கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்ட அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் கொண்டுவந்தார். உடனே காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி உறுப்பினர்கள் எழுந்து சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டனர். நம்பிக்கை கோரும் தீர்மானம் 119-0 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்