முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமா காஸ்ட்யூமர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - சென்னை ஐஸ் ஹவுசில் சினிமா காஸ்ட்யூம் டிசைனர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை-பணம், வெள்ளி பொருட்கள் மாயமாகி உள்ளன. உறவினர்கள் கை வரிசையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி விவரம் வருமாறு:-

சென்னை ஐஸ் ஹவுஸ் பெசன்ட் சாலையில் வசிப்பவர் காஜா மொய்தீன் (65). இவர் சினிமா காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர். தற்போது வீட்டருகில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் முன்னால் தி.மு.க. வட்ட செயலாளராகவும், வஃப் போர்ட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு சபுருன்னிகா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். காஜாமொய்தீனின் சொந்த ஊர் வந்தவாசி கடந்த வாரம் காஜா மொய்தீன் தனது குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய காஜாமொய்தீன் தனது வீட்டை சுத்தம் செய்தபோது வீட்டின் தரையில் மோதிரம் கீழே கிடந்துள்ளது. உடனே வீட்டில் உள்ளவர்களை திட்டிய காஜா மொய்தீன் மோதிரத்தை எடுத்து பீரோவில் வைப்பதற்காக பீரோவை திறந்து லாக்கரில் வைக்க லாக்கரை திறந்துள்ளார். லாக்கரை திறந்தபோது லாக்கரிலுள்ள நகை-பணம் எதுவும் இல்லாதது கண்டு திடுக்கிட்டு போய் தேடி பார்த்துள்ளார். லாக்கர் அறை முழுவதும் நகை-பணம் எதுவும் இல்லாமல் சுத்தமாக துடைத்து வைத்தாற்போல் இருந்துள்ளது. லாக்கரில் 85 பவுன் நகையும் ரூ.6 லட்சம் ரொக்கமும் 3/4 கிலோ வெள்ளி பொருட்களும் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

இதுபற்றி காஜாமொய்தீன் ஐஸ் ஹவுஸ் போலீசில் புகார்  அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பீரோ உடைக்கப்படவில்லை, வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை, ஆகவே இந்த திருட்டை காஜா மொய்தீனின் நெருங்கிய உறவினர்கள் யாராவது செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்