முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மாணவர்களிடம் வேவுபார்க்கும் கருவி அகற்றப்பட்டது

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,பிப்.26 - அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்களில் மேலும் 4 பேர் கால்களில் கட்டப்பட்டிருந்து வேவு பார்க்கும் கருவியை அமெரிக்க அதிகாரிகள் அகற்றினர். 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் டிராவேலி பல்கலைக்கழகத்தல் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இவர்கள் முறையான விஷா இல்லாமல் அந்த பல்கலைக்கழக உதவியுடன் படித்து வந்தனர். முறையான விஷா இல்லாததால் அந்த பல்கலைக்கழகத்தை அமெரிக்க அரசு மூடிவிட்டது. இதனால் அதில் படித்த மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள். பல்கலைக்கழகம் மூடப்பட்டதோடு இந்திய மாணவர்களை கண்காணிக்க அவர்களில் 18 பேர் கால்களில் வேவு பார்க்கும் கருவியை அமெரிக்க அதிகாரிகள் பொருத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையொட்டி அந்த மாணவர்கள் கால்களில் இருந்து வேவுபார்க்கும் கருவியை அமெரிக்க அதிகாரிகள் கழற்றி வருகிறார்கள். முதலில் 7 பேர் கால்களில் இருந்து கழற்றப்பட்டது. நேற்றுமுன்தினம் மேலும் 4 பேர் கால்களில் இருந்து கருவி கழற்றப்பட்டது. இன்னும் 7 பேர் கால்களில் இருந்து கருவிகள் கழற்றப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்