முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: சானியா மிர்சா புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

பாரிஸ், ஜூன். 3 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவி ல், இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் எலீனா வெஸ்னினா ஜோடி அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கிராண்ட் ஸ்லாம் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில், சானி யா மிர்சா முதன் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக அவர் கலப்பு இரட்டையர் பிரிவில் 2  முறை இறுதிச் சுற்றில் ஆடினார்.  

இந்த வருடத்தின் 2 - வது கிராண்ட் ஸ்லாம்போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த இரண்டு வார காலமாக கோலாகலமாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணிவீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத்திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவி ல், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா, ரஷ்ய வீராங்கனையான எலீனா வெஸ்னினாவுடன் இணைந்து ஆடி வந் தார். 

சானியா மிர்சா மற்றும் எலீனா ஜோடி அரை இறுதிச் சுற்று ஒன்றில் கலந்து கொண்டது. இந்த ஜோடியும், அமெரிக்காவைச் சேர்ந்த இணையும் பலப்பரிட்சை நடத்தின. 

ரோலண்டு காரோஸ் மைதானத்தில் நடந்த இந்த பரபரப்பான அரை இறுதிச் சுற்றில் இந்திய மற்றும் ரஷ்ய ஜோடி அபாரமாக ஆடி, 6 - 3, 2 - 6, 6 - 4 என்ற செட் கணக்கில் லிசா ரேமண்ட் மற்றும் லைஜெல் ஹீயூபர் இணையை வென்று அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது.

3 செட் கொண்ட இந்த ஆட்டம் 105 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சானியா ஜோடி 7 -ம் நிலை ஜோடி யாகும். இதில் தோல்வி அடைந்த அமெரிக்க இணை 4 -ம் நிலை ஜோடியாகும். 

மகளிருக்கான மற்றொரு இரட்டையர் காலிறுதியில், செக். குடியரசை ச் சேர்ந்த அன்ட்ரியா ஹிலவகோவா மற்றும் லூசி ரடேக்கா ஜோடியு ம், வானியா கிங் (அமெரிக்கா) மற்றும் யரோஸ்லாவா ஷ்வெடே னா(கஜகஸ்தான்) இணையும் மோதின. 

இதில் செக். குடியரசைச் சேர்ந்த ஜோடி 6 - 3, 6 - 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஜோடி இறுதிச் சுற்றில் சானியா மற்றம் எலீனா இணையுடன் மோத இருக்கிறது. இந்தப் போட்டியில் செக். குடியரசு ஜோடி தகுதி நிலை பெறாத ஜோடியாகும். 

சானியாவுடைய டென்னிஸ் வாழ்க்கையில் அவர் 3 -வது முறையாக கிராண்ட் ஸ்லாம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்றில் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்