முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. தலைவர் கருணாநிதி 88-வது பிறந்தநாள் விழா

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன் 3 - தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு இன்று 88-வது பிறந்நாள். இதனையொட்டி தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.  இன்று காலை 6.30 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் பெற்றோர் படத்திற்கு கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.  இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் பெரியார் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க.முன்னிணியினர் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறார். கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாட தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்ததான மற்றும் கண்தான முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்று மாலை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கவியரங்கம், வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது.  தி.மு.க. இலக்கிய அணி சார்பில் நாளை( 4 ம் தேதி) மாலை கலைஞர் அரங்கில் பிறந்த நாள் விழா பட்டிமன்றம், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்