முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதிமாறனை நீக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.3 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)​யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின் வருமாறு:

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தற்போது ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தி.மு.க. சேர்ந்த தயாநிதிமாறன் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக முந்தைய அரசில் (2004-2009) பதவி வகித்தபோது செய்துள்ள பல ஊழல்கள் இன்று வெளிவரத் தொடங்கி உள்ளன. ஏர்செல் கைபேசி நிறுவனத்தை வாங்குவதற்கும், அதற்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கும் பிரதிபலனாக சுமார் 800 கோடி ரூபாய் அளவுக்கு தயாநிதிமாறன் மூலம் சன் டிவி நிறுவனம் பலன் அடைந்தது என்ற செய்தியை டெஹல்கா செய்தி நிறுவனம் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளது.

தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 இணைப்புகளை தயாநிதிமாறன் ரகசியமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தை தனது வீட்டுடன் இணைத்து, சன் டிவி ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார் என்றும் அதன் மூலம் மத்திய அரசுக்கு 440 கோடி ரூபாய் அளவுக்கு வருமான இழப்பு இருக்கும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 2007 லேயே இது சம்மந்தமாக சிபிஐ அனுப்பிய விசாரணை அறிக்கை மீது பிரதமர் மன்மோகன்சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மேற்கண்ட ஊழல்கள் வெளிவந்துள்ள பின்னணியில் தயாநிதிமாறனை மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக nullக்க வேண்டுமென்றும், பணப்பரிமாற்றம் மற்றும் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்