முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபநாசம்-சேர்வலாறு அணை நீர்மட்டம் உயர்வு

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

அம்பை, ஜூன் 3 - தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. பாபநாசம் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நல்ல மழை பெய்து வருவதால் பாபநாசம் அணைப்பகுதியில் 160 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 40 அடியானது. மேலும் நேற்று பகல் முழுவதும் அணைப்பகுதியில் நல்ல சாரல் மழை பெய்துள்ளதால் நேற்று இரவு மேலும் 10 அடி உயர்ந்து 50 அடியாக உயரும்.அதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாள் இரவில் 28 அடி தண்ணீர் உயர்ந்து 79  அடியானது. இன்று சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து 85 அடியை எட்டும். அதே போல் கடனா, ராமநதி அமைகளில் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணைக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவியில் அதிகமாக நீர் கொட்டுவதால் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.தற்போது கன்னடியன் கால்வாயில் உபரி நீர் மேல்மட்ட கால்வாய் பணிகள் நடந்து வருவதால் பாபநாசம்அணையில் இருந்து நீர் திறப்பது தாமதமாகும் என தெரிகிறது. 

அம்பை வட்டாரத்தில் நல்ல சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கார் நெல் சாகுபடிக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.எல்லா விவசாய கிடங்குகளிலும் உரம், நெல் விதை தேவையான அளவு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்