முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - தென் ஆப்பிரிக்கா7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

டெல்லி, பிப். 26 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில், டி வில்லியர் ஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவருக்குப் பக்கபலமாக கேப்ட ன் ஸ்மித், டுமினி ஆகியோர் ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, அறிமுகப் பந்து வீச்சாளரான இம் ரான் டாகிர் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி னார். ஸ்டெயின், மற்றும் போத்தா ஆகியோர் அவருக்குப் பக்கபல மாக பந்து வீசினர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டெல்லியில் உள்ள பெ ரோஷா கோட்லா மைதானத்தில் 7 -வது லீக் ஆட்டம் நடந்தது. குரூப் பி சார்பிலான இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மே.இ.தீவுகள் அணிகள் மோதின. 

முன்னதாக இதில் பேட்டிங் செய்த மே.இ. தீவு அணி தெ. ஆ. அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 222 ரன்னில் சுருண்டது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 3 வீரர்கள் கா ல் சதமும் அடித்தனர். 

ஆல்ரவுண்டர் பிராவோ அதிகபட்சமாக, 82 பந்தில் 73 ரன்னை எடுத் தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் போத்தா வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு. வாகி பெவிலியன் திரும்பி னார். 

அடுத்தபடியாக, ஜே.பிராவோ 37 பந்தில் 40 ரன்னை எடுத்தார். தவிர, டி. ஸ்மித் 57 பந்தில் 36 ரன்னையும், சந்தர்பால் 51 பந்தில் 31 ரன்னையும், தாமஸ் 26 பந்தில் 15 ரன்னையும் எடுத்தனர். கெய்ல் மற்றும் சர் வான் ஆகியோர் தலா 2 ரன்னிலும், பொல்லார்டு பூஜ்யத்திலும் ஆட்டம் இழந்தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில், அறிமுக வீரரான இம்ரான் டாகிர் 41 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட்டை எடுத்தார். ஸ்டெயின் 24 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, போத்தா 48 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். 

தென் ஆப்பிரிக்கா அணி 223 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மே.இ. தீவு அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 42.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்னை எடுத்தது. 

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் அளிக்கப்பட்டது. 

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 105 பந்தில் 107 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தா  ர். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

துவக்க வீரராக களம் இறங்கிய கேப்டன் ஸ்மித் 78 பந்தில் 45 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக்கம். டுமினி 53 பந்தில் 42 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 1 பவுண்ட ரி அடக்கம். முன்னதாக அம்லா 14 ரன்னிலும், காலிஸ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

மே.இ.தீவு அணி தரப்பில், பொல்லார்டு 37 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, ரோச் மற்றும் பென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டிவில்லி யர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்