முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் ஜெயலலிதா மலர்போர்வை வைத்து மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 -​ காயித்தே மில்லத்தின் 116-வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர்போர்வை வைத்து மரியாதை செலுத்தினார். இஸ்லாமிய சமுதாயத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிறுவனத் தலைவருமான மறைந்த காயிதே மில்லத்தின் 116-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் காயிதேமில்லத் நினைவிடத்தில் காலை 11 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா மலர்போர்வை வைத்து மரியாதை செய்தார். விழாவில் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, கே.வி.ராமலிங்கம், எஸ்.பி.வேலுமணி, எஸ்.பி.சண்முகநாதன், செ.கருப்புச்சாமி, வி.செந்தில்பாலாஜி, கோகுல இந்திரா, செந்தமிழன், ஆர்.பி.உதயக்குமார், செல்வி ராமஜெயம், பி.வி.ரமணா, புத்திசந்திரன், பச்சைமால், பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சின்னையா, டாக்டர் விஜய் உள்பட அனைத்து அமைச்சர்களும் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், தம்பித்துரை எம்.பி., சிறுபாண்மையினர் பிரிவு மாநிலச் செயலாளர் அன்வர்ராஜா, தென் சென்னை மாவட்ட சிறுபாண்மையினர் பிரிவு செயலாளர் முகமது அலி ஜின்னா, கவிஞர் விரை கரீம்,  விசாலாட்சி நெடுஞ்செழியன், சுலோசனா சம்பத், எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், பா.வளர்மதி, ராஜலட்சுமி, பொன்ராஜா, வேதாச்சலம், அப்துல் ரஹீம், நீலகண்டன் மற்றும்  வட சென்னை மாவட்ட செயலாளர் பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.சீனிவாசன், பாலராமன், டைரக்டர் நாஞ்சில் அன்பழகன்  உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா வருகையொட்டி பள்ளி வாசல் முன்பு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக கூடியிருந்தனர். முதல்வருக்கு ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்