முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்துக்கு மேலும் 1000 மெகா வாட் மின்சாரம் ஒதுக்குக-பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 7 - மின்சார நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தாலும் கால தாமதம் ஏற்படுவதால் தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர்ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்கள் மிக கடுமையான மின் தட்டுப்பாட்டுக்கு உள்ளாகி இருப்பதை உங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் மின் உற்பத்தி தேக்க நிலையில் உள்ளது. தமிழக மின் வாரியம் 1500 மெகாவாட் மின் பற்றாக்குறையால், மின்தடையை அமல்படுத்தி உள்ளது. அடிக்கடி குறிப்பிட்ட நேரம் மட்டுமல்லாமல் மின் தடை ஏற்பட்டு விடுகிறது. இதனால் பொதுமக்களும், தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  சீரற்ற மின்தடை காரணமாக வேளாண்துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால், பம்பு​செட்கள் இயங்காமல் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக செய்யப்பட்டு வரும் புதிய திட்டங்களின் கட்டுமான பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன.
இந்த மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி தொடங்க ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மத்திய மின் உற்பத்தி திட்டங்களான கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் (2ல1000 மெகாவாட்) மற்றும் நெய்வேலி அனல் மின் நிலைய 2​ம் பகுதி விரிவாக்கம் (2ல250 மெகா வாட்) ஆகியவை கடந்த 2009-ம் ஆண்டு மின் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இரு மின் உற்பத்தி திட்டகட்டுமான பணிகள் இன்னமும் முடிய வடையாதது, மாநில அரசை கவலை கொள்ள செய்கிறது. மின் சப்ளைக்கும் தேவைக்கும் உள்ள இடைவெளியை குறைத்து மின்சார நிலையை மேம்படுத்த நான் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன்.
இத்தகைய நடவடிக்கைகள் எடுத்த போதிலும், உடனடியாக மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க செய்ய இயலாத சூழ்நிலை நிலவுவதால் தமிழ் நாட்டில் மேலும் சில காலத்துக்கு மின் தட்டுப்பாடு தொடரக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்.   எனவே nullநீங்கள் இதில் தலையிட்டு தமிழக மக்களும், விவசாயிகளும் தாங்கள் உண்மையான தேவையை nullர்த்தி செய்து கொள்ள, மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழ் நாட்டுக்கு கூடுதலாக மேலும் 1000 மெகாவாட் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து உடனே உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழ் நாட்டில் நடந்து வரும் மத்திய மின் உற்பத்தி திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு உத்தர விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுதி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்