முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் உடல்நிலை பாதிப்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 11 - ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை எதிர்த்து நேற்று 7-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ் உடல்நிலை மிகவும் கவலை அளிக்கும்படி இருந்ததால் அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதனால் ராம்தேவ் உண்ணாவிரதத்தை கைவிடாமல் ஹரித்வார் சென்று பதஞ்சலி என்ற இடத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் திரவ உணவையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறினர். அதனையடுத்து அவர் எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றை உட்கொள்ள  சம்மதித்தார். ஆனால் தொடர்ந்து நேற்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடல்நிலை கவலைப்படும்படி உள்ளது. அதனால் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ராம்தேவ் ரத்து ஓட்டம் 140-70 ஆகவும் இருதய துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 58 ஆகவும் குறைந்துவிட்டது. இது மிகவும் குறைவாகும். அவருடைய இருதய துடிப்பும் ரத்த ஓட்டமும் மேலும் குறைந்தால் அது இருதயத்தை தாக்கும். ராம்தேவ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் கண்டுள்ளோம். இது கவலை அளிக்கக்கூடியது என்று ராம்தேவை சோதித்த தலைமை மருத்துவ அதிகாரி யோகேஷ் சந்திர சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். டாக்டர்கள் ஆலோசனை வழங்கியதையொட்டி ராம்தேவ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்