முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரிவடைந்துவரும் தொழில் வளர்ச்சி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலை

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் - 11 - வீழ்ச்சியடைந்துவரும் இந்திய தொழில் வளர்ச்சி மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். கடந்த 2003-2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்  இந்தியாவின் தொழில் வளர்ச்சி 13.1 சதவீதமாக இருந்தது. இது 2004 - 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6.3 சதவீதமாக குறைந்துள்ளது. 1992 - 93 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16.6 சதவீதமாக இருந்த இந்திய தொழில் வளர்ச்சி 1993- 94 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.4 சதவீதமாக கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. 

இந்தியாவின் தொழில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துவருவது கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தொழில் வளர்ச்சி குறித்த உண்மையான விபரங்களை அறிவதற்காக அரசு காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது  என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்