முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த அருணாச்சல் முதல்வருக்கு நினைவிடம் அமைக்க முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

இட்டாநகர், ஜூன் - 12 - ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவுக்கு நினைவிடம் அமைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.  அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு கடந்த ஏப்ரல் 30 ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவரது சடலம் 5 நாட்களுக்கு பிறகு தவாங் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவருடன் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த மேலும் 4 பேரும் பலியானார்கள். டோர்ஜியின் நினைவாக அவருக்கு நினைவிடம் ஒன்றை அமைக்க அவரது குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
டோர்ஜியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட லுகுதாங்க்கிற்கு அவரது குடும்பத்தினர் நேற்று சென்று அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை நடத்தினர். டோர்ஜியின் இரண்டாவது மகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அவரது குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். அவரது கல்லறை இருக்கும் இடத்தில் நினைவிடம் ஒன்றை அமைப்பது என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
டோர்ஜியின் சொந்த கிராமமான லுகுதாங்கில் உள்ள கிராம மக்களுக்கு டோர்ஜியின் மகன் தாஷி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த கிராம மக்கள் தான் டோர்ஜியின் உடலை கண்டெடுப்பதற்கு பெரிதும் உதவி செய்தார்கள். இந்த கிராம மக்களுக்கு மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு டோர்ஜியின் நினைவாக நிதி உதவியும்  செய்யப்பட்டது. டோர்ஜியின் 49 நாள் ஈமக்கிரியைகள் வருகிற 17 ம் தேதி துவங்குகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago