முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      இந்தியா

மும்பை, ஜூன் - 12 - மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. ஆனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. தர்பங்காவில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை மும்பை அருகே உள்ள கசாரா வனப்பகுதியில் திடீரென தடம் புரண்டது. இதனால் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றன. இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நேற்று அதிகாலை 1 மணிக்கு நிகழ்ந்தது என்று மத்திய ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிறகு மாற்று ஏற்பாடுகள் மூலம் இந்த ரயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்