முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய ரயில்வே பட்ஜெட் - மம்தா தாக்கல் செய்தார்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. பிப். 26 - மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை துவங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பாராளுமன்றத்தின் லோக் சபை ராஜ்ய சபை ஆகிய இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி  பிரதீபா பாட்டீல் உரை நிகழத்தினார். அதன் பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றன.

நேற்று பாராளுமன்றத்தின் லோக்சபையில் 2011 - 12 ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல்  செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பயணிகளுக்கான மற்றும்  சரக்குகளுக்கான கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை.

2010 - 11 ம் நிதியாண்டில் ரயில்வே துறையின் வருமானம்ரூ. 1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் மம்தா அறிவித்தார்.

வரும் 2011 - 12 நிதியாண்டில்  இயக்க செலவுகள் ரூ. 87,000 கோடியாக இருக்கும் என்று இந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓராண்டில் மிக அதிக தொகையாக 2011 - 12 ம் ஆண்டிற்கு திட்ட ஒதுக்கீடாக ரூ. 57, 630 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

 ரயில்வே பத்திரங்கள் மூலம் ரூ. 10,000 கோடி திரட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலமான பொருளாதார நோக்கத்தை கொண்டதாக ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.

 பல்வேறு தொழில்துறைகளுக்கும் உதவும் வகையில் வர்த்தக நோக்கம் கொண்ட கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் மம்தா தெரிவித்தார்.

ரயில்வே திட்டங்களை நிறைவேறுவதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புக்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரயில்வே தொடர்பான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர்  கூறினார்.

ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றியதன் மூலம் கடந்த 2010 -11 நிதியாண்டில் ரயில்வே துறையின் செலவு 97 சதவீதம் அதிகரித்துள்ளது என்ழறும்  இதே ஆண்டில் ரயில்வே துறைக்கு ரூ. 3,500 கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

காலியாக இருக்கும் 1.75 லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரயில்வே துறையில் 16,000 முன்னாள் ராணுவத்திற்கு  வேலை வழங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.

ரயில்களில் பாதுகாப்புக்கு முதலாவது முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் ரயில் விபத்துக்களின்  எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 வட மேற்கு எல்லை மண்டலத்தில் ரயில் விபத்து தடுப்பு கருவிகள்  வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் இவை மேலும் 3 மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒரு இடத்தில் ரயிலை நிறுத்தினால் அதன் பாதிப்பு மற்ற இடங்களிலும்  பாதிப்பை ஏற்படுத்தும் ரயில்வே தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

2011 0 2012  180 கி. மீ. தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அகில இந்திய  செக்கியூரிட் ஹெல்ப்லைன் ஒன்றும் அமைக்கப்படும்.

அலகாபாத் - மும்பை, புனே -அகமதாபாத்,சியால்டா - பூரி, செகந்திராபாத் -  விசாககப்பட்டினம், மதுரை - சென்னை  வழித்தடங்களில் புதிய தூரந்தோ  ரயில்கள் இயக்கப்படும் என்றும்  மம்தா கூறினார்.

டெல்லி, மும்பையிலிருந்து குஜராத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்திற்காக புதிய இணைப்புகள் கொடுக்கப்படும் என்றும் என்றும் சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் ஒருங்கிணைந்த பறநகர் ரயில்கள் விடப்படும்.

பிரதான் மந்திரி ரயில் விகாஸ் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் ரயில்வே தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்றும் காஷ்மீர் மாநிலத்தில் ரயில்வே தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மெட்ரோ கோச் பேக்டரி ஒன்று அமைக்கப்படும் என்றும் ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து அடுத்த மாதம் முதலாவது ரயில் பெட்டி வெளியேறும் என்றும் மம்த தெரிவித்தார்.

ஒரிஸ்ஸாவில் நில ஆர்ஜிதம் முடிந்த பிறகு சரக்கு ரயில் பெட்டி  தொழிற்சாலைக்கான பணிகள் துவஙகும் என்றும் அவர் கூறினார்.

டார்ஜிலிங்கில் ரயில்வே துறைக்காக மென்பொருள் மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் சமூக நல திட்டங்களுக்கான நிதியம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 31 ம் தேதிக்குள் 442 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் மும்பையில் ரயில் பாதைகள் ஓரம்  வசிக்கும் மக்களுக்கு வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டி  தரும் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும் என்றும் மம்தா கூறினார்.

அகில இந்திய ரயில் பயணத்திற்கு பல நோக்கு  ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விமான நிலையங்களில் பயன்படுத்துவது போன்ற  டிராலிகள் மேலும் பல ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வங்காள தேசத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் மூத்த குடிமக்கள் ரயில் சலுகைகளை பெறுவதற்கான வயது வரம்பு 60 லிருந்து 58 ஆகி குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும்  வீரதீரச்செயல் விருது பெற்றவர்களுக்கு  ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு  தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத குடும்ப பயன கட்டண சலுகை இனி வருடத்திற்கு  இரு முறையாக அதிகரிக்கப்படும் என்றும் மம்தா கூறினர்.

ரயில்வே திட்டங்களுக்கு பாலங்களின் தேவை அதிகமாக இருப்பதால் பாலங்களை அமைப்பதற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரிக்க காஷ்மீரில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் மகாராஷ்டிர மாநிலம்  தாக்கூரலி எனற இடத்தில் ரயில்வே துறைக்காக எரிவாயுவை பயன்படுத்தி 700 மெகாவாட் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 வரும் நிதியாண்டில் ரயில்வே துறை மூலம் 99.30 கோடி டன் சரக்குகள் கையாளப்படும் என்றும் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கும் பன்வெல் ரயில் நிலையத்திற்கும் இடையே தினசரி 10 லட்சம் பேர் ரயில்களில் பயனம் செய்கிறார்கள் என்றும் மம்தா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்