முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய மாணவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: அமெரிக்கா

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,பிப்.27 - அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்று அந்த நாடு,இந்தியாவுக்கு உறுதி அளித்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஷாம் பல்கலைக்கழகம் மூடப்பட்டுவிட்டதால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் பலரின் கால்களில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டன. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். அவர்களின் படிப்பு எந்த வகையிலும் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா ஷங்கருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த உறுதி மொழியை ஹில்லாரி அளித்துள்ளார். அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹில்லாரி கூறியதாக மீரா ஷங்கர் நேற்று வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். கலிபோர்னியாவில் உள்ள திரிவேலி பல்கலைக்கழகம் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அதனைத்தொடர்ந்து இந்திய மாணவர்கள் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளப்படும் என்று ஹில்லாரி கிளிண்டன் உறுதி அளித்துள்ளார் என்று மீரா ஷங்கர் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்