முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று முக்கிய முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் - 20 - கனிமொழி ஜாமீன் மனுமீது சுப்ரீம் கோர்ட்டு இன்று முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது. கனிமொழிக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை இதுதான். செல்போன் நிறுவனங்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு  2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை வழங்கியபோது ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டதாக மத்திய மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதற்கு முழுக்க முழுக்க காரணமானவர் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசாதான் என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. உலக மகா ஊழல்களிலேயே இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்த இமாலய ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் ராசாவின் முன்னாள் உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த் பெகூரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் உள்பட மேலும் 12 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆ.ராசாவையும் சேர்த்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேரும் டெல்லி பாட்டியாலா இல்லத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.  

இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழியும், சரத்குமாரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து கனிமொழியும் சரத்குமாரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அங்கும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இவர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான முடிவு பிறகு தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்துவந்த இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதாக கூறி வெளியேறிக் கொண்டனர். இதையடுத்து சிறப்பு டிவிஷன் பெஞ்ச் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிவிஷன் பெஞ்சுக்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையேற்று இருக்கிறார். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கை இவர்தான் ஆரம்பத்தில் இருந்து விசாரித்து வருகிறார். இவரது தலைமையிலான டிவிசன் பெஞ்ச் இன்று மீண்டும் கனிமொழி மற்றும் சரத்குமார் ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடத்த உள்ளது. எனவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரியவரும். ஜாமீன் கிடைக்க கனிமொழிக்கு இதுதான் கடைசி நம்பிக்கை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago