முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 லட்சம் பேர் கலந்துகொண்ட சமைத்து உண்ணும் போராட்டம் விஜயசாந்தி ரோட்டில் சமைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

நகரி, ஜூன் - 21 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் சார்பாக ரோட்டில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பகுதியை தனியாக பிரித்து தனித் தெலுங்கானா ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி என்ற கட்சியை ஏற்படுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனாலும் இந்த கோரிக்கை மத்திய அரசால் முறையாக கையாளப்படாததால் இழுத்துக்கொண்டே செல்கிறது.   இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஐதராபாத் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் 10 லட்சம் அடுப்புகளை வரிசையாக வைத்து பொதுமக்கள் சமையல் செய்தனர். இந்த போராட்டத்தில் அரசுப் பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். சாலை முழுவதும் விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, கேஸ் அடுப்பு ஆகியவற்றை வைத்து சமையல் செய்யப்பட்டது. தெலுங்கானா பகுதி மக்கள் காலையில் விரும்பி சாப்பிடும் பாந்த்ரா என்ற உணவை சமைத்து அனைவரும் சாப்பிட்டனர். பிறகு மதியம் கோழிக்கறியுடன் சமையல் செய்யப்பட்டது. இதையும் ரோட்டிலேயே வைத்து சாப்பிட்டனர். காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் பிற்பகல் 2 மணிக்கு முடிவுக்கு வந்தது.
இந்த போராட்டத்தில் பிரபல நடிகை விஜயசாந்தி ஹைடெக் வளாகம் பகுதியில் ரோட்டில் அடுப்பு பற்றவைத்து சமையல் செய்தார். தெலுங்கானா மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டது.  இந்த போராட்டம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago