முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ம் வகுப்பு படுக்கை வசதி ரயில் முன்பதிவு கட்டணம் குறைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - ரயில்வே பட்ஜெட்டில் 2ம் வகுப்பு படுக்கை வசதிக்கான முன்பதிவு கட்டணம் 50 சதவீதம் குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 வசூலிக்கப்பட்ட முன்பதிவு கட்டணம் குறைக்கப்பட்டு ரூ10ம், ஏ.சி. சேர்கார், ஏ.சி. வசதி செய்யப்படாதமுதல் வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு கட்டணத்தில் இனி ரூ.12ம், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் முன்பதிவுக்கட்டணம் ரூ.17 குறைகிறது. இந்த முன்பதிவு கட்டணக்குறைப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படுகிறது. 

சென்னையிலிருந்து முக்கிய இடங்களுக்கு செல்லும் ரயில்களில் 2ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் இனி கீழ்க்கண்டவாறு வசூலிக்கப்படும்.

திருச்சி-ரூ154, சேலம்-ரூ.154, ஈரோடு-ரூ.171, தஞ்சாவூர்-ரூ.168, கும்பகோணம்-ரூ.181, காரைக்குடி-ரூ.181, திண்டுக்கல்-ரூ.204, மதுரை-ரூ.222, விருதுநகர்-ரூ.241, ராமேஸ்வரம்-ரூ.236, திருநெல்வேலி-ரூ.272, தூத்துக்குடி-ரூ.272, திருச்செந்தூர்-ரூ.267, தென்காசி-ரூ.249, செங்கோட்டை-ரூ.274, நாகர்கோவில்-ரூ.290, கன்னியாகுமரி-ரூ.295, கோவை-ரூ.222, திருவனந்தபுரம்-ரூ.327, கொச்சி-ரூ.279, கோட்டயம்-ரூ.295, மங்களூர்-ரூ.323, பெங்களூர்-ரூ.183, மைசூர்-ரூ.50, விஜயவாடா-ரூ.204, ஐதராபாத்-ரூ.302, புனே-ரூ.361, மும்பை-ரூ.393, ஆமதாபாத்-ரூ.487, வாரணாசி-ரூ.530, புவனேஸ்வரம்-ரூ.300, ஹவுரா-ரூ451, புதுடெல்லி-ரூ.518.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்