முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் சேருகிறார் கோபிநாத் முண்டே

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.- 23 - மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று தெரிகிறது. மும்பையில் இருந்து நேற்று டெல்லி சென்ற அவர், டெல்லியில் அத்வானி உட்பட எந்தவொரு பா.ஜ.க மத்திய தலைவர்களையும் சந்திக்கவில்லை. எனவே அவர் காங்கிரசில் சேரும் மனநிலைக்கு வந்து விட்டதாக மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் அவர் தன் பெயரை குறிப்பிடவில்லை.
மகராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், முண்டேயுடன் இணைந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் அரசியல் செயலாளரான அகமது பட்டேலை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இந்த தகவல் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. இருப்பினும் மகராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான் அகமது பட்டேலை சந்தித்து கோபிநாத் முண்டே பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய குறையை பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியிடம் தெரிவித்தாலும் அந்த குறைகள் தீரப் போவதில்லை என்ற முடிவுக்கு கோபிநாத் முண்டே வந்த பிறகுதான் காங்கிரசில் சேர அவர் முடிவு செய்து விட்டதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. மராட்டிய மாநிலத்தில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் கோபிநாத் முண்டே. அவரை பா.ஜ.க. இழக்கப் போவது உறுதியாகி விட்டது. கோபிநாத் முண்டே காங்கிரசில் சேருவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்