முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் மீதான தாக்குதலை தடுக்க கடுமையான சட்டம்-மாயாவதி அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஜூன்.- 23 - மகளிர் மீதான தாக்குதல் மற்றும் பாலியல் பலாத்காரம் போன்ற வன்செயல்களை தடுக்க குற்றவியல் நடைமுறை சட்டம் கடுமையாக்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.  லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அதை மனதில் வைத்துக் கொண்டு எதிர் கட்சித் தலைவர்கள் எனது அரசு மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். நாட்டிலேயே அதிகளவு உத்தர பிரதேசத்தில்தான் பெண்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் அதில் சிறிதளவும் உண்மையில்லை. ஒரு சில இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அதன்படி இச்செயலில் ஈடுபடுவோர் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையிலும், வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கும் வகையிலும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
இது தொடர்பாக சட்ட நிபுணர்கள், உயரதிகாரிகளுடன் வரும் 27 ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளேன். அதை தொடர்ந்து சட்டம் பிறப்பிக்க திருத்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்