முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து பிரதமர் புதுடெல்லி வருகை

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.27 - நியூஜிலாந்து நாட்டு பிரதமர் ஜான் கீ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சார் ஷேக் அப்துல்லா பின் ஜயெத்-அல்-நஹ்யா ஆகியோர் நேற்று புதுடெல்லி வந்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பின் பேரில் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ நேற்று 5 நாள் பயணமாக புதுடெல்லி வந்துள்ளார். ஜான் கீயுடன் அவரது துணைவியார் ப்ரோநஹ் கீ, நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் திம் கிராசெர் மற்றும் வர்த்தக குழுவினர் ஆகியோர் வந்துள்ளனர். இந்த 5 நாள் பயணத்தின்போது ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்களை ஜான் கீ சந்தித்து பேசுகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர்களையும் ஜான் கீ சந்தித்து பேசுகிறார். டெல்லியில் நடைபெறும் வர்த்தகர்கள் கூட்டத்திலும் ஜான் கீ கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மேலும் ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிடுகிறார். அதனையடுத்து மும்பை செல்கிறார். மும்பையில் மகாராஷ்டிரா மாநில கவர்னர் கே.சங்கர நாராயணனையும் ஜான் கீ சந்தித்து பேசுகிறார். மும்பையில் உள்ள பாலிவுட் ஸ்டுடியோவுக்கும் செல்கிறார். ஜான் கீ பயணத்தால் இந்தியா-நியூசிலாந்து நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. மேலும் இருதரப்புக்கும் பயனுள்ள முறையில் சில ஒப்பந்தங்களும் ஏற்படலாம் என்றும் தெரிகிறது. இந்துமகா சமுத்திர பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வலிமையான நாடாக திகழ்கிறது. 

இரண்டு நாள் பயணமாக புதுடெல்லி டெல்லி வந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளிறவுத்துறை அமைச்சர் ஷேக், துணைஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர்களை சந்தித்து பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago