முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் பறிமுதல் வழக்கு: சாய்பாபா உறவினரிடம் விசாரணை

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புட்டபர்த்தி,ஜூன்.27 - ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சாய்பாபாவின் உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புட்டபர்த்தியில் இருந்து காரில் ரூ. 35.5 லட்சம் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை அதிகாரி முன் ஆஜராகும்படி சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் ரத்னாகர், ஸ்ரீநிவாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ரத்னாகர், சாய்பாபாவின் நெருங்கிய உறவினராவார். விசாரணை அதிகாரி முன் ஆஜரான ரத்னாகரிடம் பணம் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிரசாந்தி நிலையத்தில் உள்ள ரத்னாகரின் வீட்டில் இந்த விசாரணை நடந்தது. 

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய்பாபாவின் பிரத்யேக அறையான யஜூர் மந்திர் கடந்த 18 ம் தேதி திறக்கப்பட்டது. அங்கிருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ. 11.56 கோடி ரொக்கப் பணம் ஆகியவை எடுக்கப்பட்டன. அன்று ஆந்திர கர்நாடக எல்லையில் உள்ள கோடிகொண்டா சோதனை சாவடியில் கார் ஒன்றை ஊழியர்கள் சோதனை நடத்திய போது அதில் ரூ. 35.5 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அந்த பணம் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து காரில் இருந்த ஹரிசந்திர ரெட்டி, சந்திரசேகர் மூர்த்தி என்ற சேகர் மற்றும் என்ஜீனியர் சோகன்ஷெட்டி ஆகியோரை சிலமந்தூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹரிசந்திர ஷெட்டி ரூ. 35 லட்சத்தை கடத்தி வந்த கார் டிரைவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்