முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா குறித்து பிரதமர் பேசவேண்டும்: ப.சிதம்பரம் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜுன் - 28 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தொடர்பான விவாதங்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அவ்வப்போது பதில் பேசவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா ஒன்றை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த மசோதா வரைவு நகல் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள அரசு பிரதிநிதிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கருத்து  வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. லோக்பால் மசோதா அதிகார வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மசோதா தொடர்பாக எப்போதெல்லாம் தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமோ அப்போதெல்லாம் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மசோதா குறித்த விவாதங்களில் ஒதுங்கி இருக்காமல் அவ்வப்போது தனது சொந்த கருத்தையும் தெரிவிக்க பிரதமர் தெரிவிக்க வேண்டும் என்று சிதம்பரம் கேட்டுக்கொண்டார். லோக்பால் மசோதாவின்  அதிகார வரம்பிற்குள் பிரதமரையும் சேர்த்துக்கொண்டால் அதுபற்றி தனக்கு கவலை இல்லை என்று ஏற்கனவே பிரதமர் தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பிறகு அவர் இப்பிரச்சனையில் வாயைத் திறக்கவேயில்லை. 

லோக்பால் மசோதா ஒரு விவாதத்திற்குரிய மசோதாவாக இருந்துவரும் நிலையில் அதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் தனது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் சிதம்பரம் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்