முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்ணில் கத்திக்குத்து காயம்பட்ட பெண்ணுக்கு ராகுல்காந்தி ஆறுதல்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் - 28 - தன்னை கற்பழிக்க முயன்ற இரு இளைஞர்களால் கண்ணில் கத்திக்குத்து காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு இளம்பெண்ணை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள குர்புர்வா என்ற கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரை இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்றனர். பிறகு அந்த பெண்ணை வயலில் கற்பழிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணின் கண்ணில் அவர்கள் கத்தியால் குத்தினர். பிறகு அந்த இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர். அந்த வழியாக சென்ற சில கிராமவாசிகள் அந்த பெண்ணை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்த்தனர். பிறகு அந்த பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ராஜேந்திர பிரசாத் கண் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று காலை 10.45 மணிக்கு அந்த மருத்துவமனைக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண்ணிடமும் அவளது பெற்றோரிடமும் ராகுல் நடந்ததை கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறியபின்  ராகுல்காந்தி மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக முதல்வர் மாயாவதி தலைமையிலான அரசு மீது காங்கிரசார் குற்றம் சாட்டி வரும் நிலையில் டெல்லி மருத்துவமனையில் இந்த இளம்பெண்ணை ராகுல்காந்தி பார்த்து ஆறுதல் கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்