முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகர் தேர்தலில் பொதுவேட்பாளராக சுயேட்சை எம்.எல்.ஏ.வை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூன்.- 28 - புதுவை சட்டசபை சபாநாயகர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுவை மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் பலம் கொண்ட புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. மேலும் ஆட்சிக்கு சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமாரும் ஆதரவு அளித்து வருகிறார். இதனால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பலம் 15 ஆக உள்ளது. 

அதே வேளையில் எதிர்க்கட்சிகளும் சமபலத்தில் உள்ளது. காங்கிரஸ்-7, அ.தி.மு.க.-5, தி.மு.க.-2 என்று 14 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. இந்த நிலையில் சட்டசபையில் மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என்றும், சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரசும், அ.தி.மு.க.வும் வலியுறுத்தி வந்தன. மெஜாரிட்டியை நிரூபிக்கும் வகையில் சபாநாயகர் தேர்தல் வருகிற 29-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் தேர்தலை அறிவித்த முதல்வர் ரங்கசாமி, தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிடுவார் என்றும் அறிவித்தார். இதன் மூலம் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகி உள்ளது. 

இந்நிலையில் சபாநாயகர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கட்சிகள் தங்கள் தலைமையை அணுகி உள்ளன. சபாநாயகர் தேர்தலில் பொது வேட்பாளராக சுயேட்சை எம்.எல்.ஏ. வி.எம்.சி.சிவக்குமாரை போட்டியிட வைக்கலாமா? என்று எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. ஏற்கனவே ஆட்சியை ஆதரிக்க அமைச்சர் பதவி கேட்ட அவருக்கு பதவி தரப்படவில்லை. இதனால் சிவக்குமார் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. அவரை எதிர்க்கட்சிகள் அணுகி சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் படி பேசி வருகின்றன. போட்டி ஏற்படும் பட்சத்தில் என்.ஆர்.காங்கிரசில் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் சபாநாயகர் தேர்தல் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையே பலப்பரிட்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, புதுவை அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago