முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அணி திறமையை நிரூபித்தது - சங்கக்காரா

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப்.28 - பாகிஸ்தான் அணி தான்  ஒரு சிறந்த அணி என்பதை நிரூபித்தது என்று இலங்கை கிரிக்கெட் கேப்டன்  சங்கக்காரா புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட்  லீக் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில்  பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.  வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பாக். கேப்டன் அப்ரிடி தனது பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. அதனாலேயே எளிதில் வெற்றிபெற முடிந்தது என்றார். 

தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கேப்டன் சங்கக்காரா, இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அணி சிறந்த அணியாக திகழ்கிறது. பாகிஸ்தான் அணியினர் எங்களுக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சில அரிய வாய்ப்புகளை எங்களது அணி பயன்படுத்த தவறிவிட்டது. இனி வரும் போட்டிகளில் எங்களது தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பாக செயல்படுவோம் என்றும் சங்கக்காரா தெரிவித்தார். 

உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணி இதுவரை ஒரு போட்டியில் கூட பாகிஸ்தானை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்