முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கூர் நிலப்பிரச்சனை: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஜுன் - 28 - சிங்கூர் நிலப் பிரச்சனை தொடர்பாக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கொல்கத்தா ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.  மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலையை அமைப்பதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் குதித்தது. இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தனது நானோ கார் உற்பத்தி ஆலையை குஜராத்திற்கு மாற்றிக்கொண்டது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. சிங்கூரில் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படும் என்று மம்தா பேனர்ஜி கூறியிருந்தார். ஆனால் இதற்கு டாடா மோட்டார்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகளிடமே மீண்டும் நிலத்தை ஒப்படைக்கும் மேற்கு வங்க மாநில அரசின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளமித்ரா பால், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.
நிலத்தை விவசாயிகளுக்கு மேற்குவங்க அரசு  விநியோகம் செய்வது செவ்வாய்க்கிழமை முதல் துவங்கும் என்று கூறுவதற்கான சரியான ஆதாரம் எதுவும் இல்லாததால் இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்