முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள ராம்தேவுக்கு ஹசாரே நிபந்தனை

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.- 28 - வருகின்ற ஆகஸ்ட் மாதம் இருக்கவிருக்கும் உண்ணாவிரதத்தில் பாபா ராம்தேவ் கலந்துகொள்ள அண்ணா ஹசாரே பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. 

பலமான லோக்பால் மசோதாவை வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் வருகின்ற ஆகஸ்டு 16-ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்வேன் என்று அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். இதனால் மத்திய அரசு கலங்கிப்போய் உள்ளது. மேலும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் மற்றொரு சமூக சேவகர் பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். 

இந்தநிலையில் தாம் இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் ராம்தேவ் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்றால் நான் விதிக்கும் பல நிபந்தனைகளை பாபா ராம்தேவ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநில தொலைகாட்சி ஒன்றுக்கு அண்ணா ஹசாரே நேற்றுமுன்தினம் பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது தாம் மீண்டும் இருக்கப்போவதாக அறிவத்துள்ள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள பாபா ராம்தேவ் விரும்பம் தெரிவித்துள்ளார். தாம் விதிக்கும் பல நிபந்தனைகளை ராம் தேவ் ஏற்றுக்கொண்டால் அவர் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளலாம் என்றார். 

ஊழல், கருப்புப்பணத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் சுவாமி ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதம் இருக்கும்போது கடந்த 5-ம் தேதி போலீசார் புகுந்து அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் தடியடியும் நடத்தினர். அங்கிருந்து வெளியேறிய பாபா ராம்தேவ், டேராடூனில் உண்ணாவிரதம் இருந்தார். ராம்தேவ் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாஹசாரே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டேராடூனில் ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது போலீசார் வந்தால் ஆயுதம் தாங்கிய 11 ஆயிரம் இளைஞர்களை பாதுகாப்புக்காக வரவழைக்கப்படும் என்று பாபா ராம்தேவ் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு அண்ணாஹசாரேவுக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்