முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் மீதான வரியை கேரள அரசு குறைத்தது

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், ஜூன் - 28 - டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து இந்த டீசல் மீதான மாநில அரசின் வரியை கேரள அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் இம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 142 கோடி இழப்பு ஏற்படும்.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 ம், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 50, மண்எண்ணை விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியும் மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்கு வந்தது. இந்த நிலையில் டீசல் விலை மீதான வரியை குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசும்போது முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்தார். இந்த வரி குறைப்பின் மூலம் கேரளாவில் ஒரு லிட்டர் டீசலுக்கு 75 காசுகள் மிச்சமாகும் என்றும், ஆனால் கேரள அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 142.2 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
ஏற்கனவே மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியபோது இம்மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்