முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிக் - ஷரபோவா

புதன்கிழமை, 29 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 29 - விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிர்வில் செர் பிய வீரர் ஜோகோவிக்கும், மகளிர் பிரிவில் மரியா ஷரபோவாவும் 4-வது சுற்றில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். தவிர, மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் - 1 வீராங்கனையான வோஸ் னியாக்கி, அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனைகளான வீனஸ் மற் றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 4 -வது சுற்றில் அதிர்ச்சி தோல் வி அடைந்தனர். 

இந்த வருடத்தின் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்ட ன் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் கடந் த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி தற் போது காலிறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீராங்கனைகள் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இத ற்காக அவர்கள் கடும் பயிற்சியுடன் இங்கு வந்துள்ளனர். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 4 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடந் தது. இதில் செர்பிய நட்சத்திர வீரரான ஜோகோவிக்கும், மைக்கேல் லோட்ராவும் பலப்பரிட்சை நடத்தினர். 

இதில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிக் அபாரமாக ஆடி, 6 -3, 6 - 3, 6 - 3 என்ற நேர் செட் கணக்கில் 19 -ம் நிலை வீரரான மைக்கேலை தோ ற்கடித்து கால் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். 

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர் ரேவும், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு கேஸ்கியூட்டும் மோதினர். இதில் 4 -ம் நிலை வீரரான முர்ரே 7 - 6(7), 6 - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் 17 -ம் நிலை வீரரான ரிச்சர்டை தோற்கடித்தார். 

இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்டு தாமிக்கும், பெல்ஜியம் வீரர் சேவியர் மலிசியும் மோதினர். இதில் தாமிக் 6 - 1, 7 - 5, 6 - 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

மகளிர் ஒற்றையர் பிரிவின் 4 -வது சுற்று ஒன்றில் நடப்பு சாம்பியனும் அமெரிக்க முன்னணி வீராங்கனையுமான செரீனா வில்லியம்சும், பிரான்ஸ் வீராங்கனை பார்டோலியும் மோதினர். 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை பார்டோலி அபாரமாக ஆடி, 6 - 3, 7 - 6(8) என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். 

மற்றொரு ஆட்டத்தில் 23 -ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லி யம்சும், பல்கேரிய வீராங்கனை பைரோன்காவாவும் மோதினர். இதி ல் பல்கேரிய வீராங்கனை 6 - 2, 6 - 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

முதல் நிலை வீராங்கனையும், டென்மார்க் வீராங்கனையுமான கரோலின் வோஸ்னியாக்கி மற்றொரு ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 6 - 1, 6 - 7(7), 5 - 7 என்ற செட் கணக்கில் சுலோவே க்கிய வீராங்கனை சிபுல்கோவாவிடம் தோல்வி அடைந்தார். 

ரஷ்யாவின் கவர்ச்சி வீராங்கனையான மரியா ஷரபோவாவும், சீன வீராங்கனை ஷூய் பெங்கும் மற்றொரு ஆட்டத்தில் மோதினர். இதி ல் 5 -ம் நிலை வீராங்கனையான மரியா 6 - 4, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago